search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுதி உள்ளிட்ட 4 நாடுகள் விதித்த நிபந்தனைகளை ஏற்க கத்தார் மறுப்பு - மோதல் மேலும் முற்றுகிறது
    X

    சவுதி உள்ளிட்ட 4 நாடுகள் விதித்த நிபந்தனைகளை ஏற்க கத்தார் மறுப்பு - மோதல் மேலும் முற்றுகிறது

    சவுதி அரேபியா, எகிப்து உள்பட 4 நாடுகள் விதித்த 13 நிபந்தனைகளை ஏற்க கத்தார் மறுத்துள்ளதால் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.
    தோகா:

    அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் மீது அண்டை நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு, பக்ரைன் ஆகிய நாடுகள் திடீரென பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்தன.

    இந்த நாடுகளுக்கு ஈரான் எதிரியாக இருந்து வருகிறது. ஆனால், ஈரானுடன் கத்தார் நட்பு பாராட்டி வருகிறது. இதனால்தான் இந்த நாடுகள் கத்தாருக்கு தடை விதித்தன. மேலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கத்தார் செயல்படுவதாகவும் அந்த நாடுகள் குற்றம்சாட்டின. தங்கள் மீதான தடையை விலக்கி கொள்ளும்படி கத்தார் வேண்டுகோள் விடுத்தது.

    இந்த வி‌ஷயத்தில் கத்தாருக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண சமரச முயற்சியில் ஈடுபட்டது. அமெரிக்காவும் இரு தரப்பினரும் சமரசமாக செல்லும்படி அறிவுறுத்தியது.



    இந்த நிலையில் சவுதி அரேபியா உள்ளிட்ட 4 நாடுகளும் கத்தாருக்கு 13 நிபந்தனைகளை விதித்தன. இவற்றை ஏற்றுக்கொண்டால் தடைகளை விலக்கி விடுவதாக அவர்கள் கூறினார்கள்.

    கத்தாரில் அரசு ஆதரவுடன் செயல்படும் அல் ஜசீரா டி.வி.யை மூட வேண்டும், ஈரானுடன் உள்ள நெருக்கத்தை குறைத்து கொள்ள வேண்டும், கத்தாரில் உள்ள துருக்கி ராணுவ முகாமை மூடவேண்டும் ஆகியவை முக்கிய நிபந்தனைகளாக இருந்தன.

    இந்த நிபந்தனைகளை 10 நாட்களுக்குள் ஏற்றுக் கொண்டால் தடைகளை விலக்கிக்கொள்வதாக கூறியது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்க கத்தார் இப்போது மறுத்துள்ளது. நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை அந்த நாடுகள் விதித்துள்ளன.

    எனவே, நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கத்தார் கூறி இருக்கிறது.

    நிபந்தனைகளை கத்தார் ஏற்க மறுத்து விட்டதால் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது.
    Next Story
    ×