search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரம் இல்லாமல் அனுப்புவதாக புகார்: பிரேசில் நாட்டு இறைச்சிக்கு அமெரிக்காவில் ‘திடீர் தடை’
    X

    தரம் இல்லாமல் அனுப்புவதாக புகார்: பிரேசில் நாட்டு இறைச்சிக்கு அமெரிக்காவில் ‘திடீர் தடை’

    பிரேசில் நாட்டு இறைச்சியை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்து உள்ளது. சமீப நாட்களில் மட்டும் 8 லட்சத்து 60 ஆயிரம் கிலோ இறைச்சிகளை அமெரிக்கா பிரேசிலுக்கு திருப்பி அனுப்பி உள்ளது.

    வாஷிங்டன்:

    வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்வதில் பிரேசில் நாடு முன்னணியில் உள்ளது.

    இங்கிருந்து சீனா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு அதிக அளவில் இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை மற்ற நாடுகளுக்கு அனுப்புகின்றனர்.

    ஆனால், இந்த இறைச்சிகள் தரமற்றவையாக இருப்பதாக புகார்கள் வந்தன. சமீபத்தில் அங்குள்ள இறைச்சி உற்பத்தி நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தரமான இறைச்சி என சான்றிதழை பெற்று வெளிநாடுகளுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து பிரேசில் நாட்டு இறைச்சியை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்து உள்ளது. சமீப நாட்களில் மட்டும் 8 லட்சத்து 60 ஆயிரம் கிலோ இறைச்சிகளை அமெரிக்கா பிரேசிலுக்கு திருப்பி அனுப்பி உள்ளது.

    Next Story
    ×