search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடிகனில் போப் ஆண்டவரை டிரம்ப் இன்று சந்திக்கிறார்
    X

    வாடிகனில் போப் ஆண்டவரை டிரம்ப் இன்று சந்திக்கிறார்

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக போப் ஆண்டவர் பிரான்சிசை இன்று வாடிகனில் சந்திக்கிறார்.
    வாடிகன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபின் முதன் முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அத்துடன் வாடிகன் சென்று போப் ஆண்டவரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

    அதன்படி சவுதி அரேபியா, இஸ்ரேல், சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இத்தாலி வருகை தந்தார். அங்கு அந்நாட்டு அதிபர் செர்ஜியோ மேட்டரல்லா, பிரதமர் பயோலோ ஜென்டிலோனி ஆகியோரை சந்திக்கிறார்.



    அதற்கு முன்னதாக இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு வாடிகன் செல்கிறார். அங்கு போப் ஆண்டவர் பிரான்சிசை சந்தித்து பேசுகிறார். அப்போது இருவரும் பொதுவான பிரச்சினைகள் குறித்து அலசுகிறார்கள்.

    போப் ஆண்டவர் பிரான்சிசை அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது தான் முதன் முறையாக சந்திக்கிறார். தேர்தல் பிரசாரத்தின் போது மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தார். அதற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×