search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாசிடோனியா பாராளுமன்றத்துக்குள் நுழைந்து சூறை - எம்.பி.க்கள் மீது தாக்குதல்
    X

    மாசிடோனியா பாராளுமன்றத்துக்குள் நுழைந்து சூறை - எம்.பி.க்கள் மீது தாக்குதல்

    மாசிடோனியா பாராளுமன்ற சபாநாயகர் தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி ஆதரவுடன் அல்பேனிய கட்சியை சேர்ந்த தலாத் சபெரி வெற்றி பெற்றதில் ஆத்திரம் அடைந்த வி.எம்.ஆர்.ஓ-.டி.பி.எம்.என்.இ. கட்சி ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை சூறையாடினர்.
    ஸ்கோப்ஜி:

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மாசிடோனியாவில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு (வி.எம்.ஆர்.ஓ-.டி.பி.எம்.என்.இ) பின்னடைவு ஏற்பட்டது. அல்பேனிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலை உருவானபோது, ஆளும் கட்சி அதை தவிர்த்தது. இதையடுத்து சமூக ஜனநாயக கட்சி தலைவர் ஷோரன், அல்பேனிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற முயற்சித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வி.எம்.ஆர்.ஓ-.டி.பி.எம்.என்.இ. கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் அங்கு நேற்றுமுன்தினம் நடந்த பாராளுமன்ற சபாநாயகர் தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி ஆதரவுடன் அல்பேனிய கட்சியை சேர்ந்த தலாத் சபெரி வெற்றி பெற்றார்.

    இதில் ஆத்திரம் அடைந்த வி.எம்.ஆர்.ஓ-.டி.பி.எம்.என்.இ. கட்சி ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து சூறையாடினர். நாற்காலி, மேஜைகளை உடைத்து துவம்சம் செய்தனர். எம்.பி.க்களை தாக்கினர். சமூக ஜனநாயக கட்சி தலைவர் ஷோரன் முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவத்தால் மாசிடோனியாவில் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×