search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை திருநகரில் இந்திய கம்யூஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    X
    மதுரை திருநகரில் இந்திய கம்யூஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    மதுரை மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் போராட்டம்: 67 பேர் கைது

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து மதுரை மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 67 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பரங்குன்றம்:

    தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து திருமங்கலத்துக்கு ரூ.33, கள்ளிக்குடி ரூ.43, திருமங்கலத்தில் இருந்து கள்ளிக்குடி ரூ.13 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கள்ளிக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் விசுவநாதன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், ஒன்றிய குழு உறுப்பினர் பெருமாள், சாலைமுத்து, பிலாவடிகுமார், கந்தன், பிச்சை, சுந்தரராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினர்.

    மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் ஒத்தக்கடையில் அரசு பஸ் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது.

    இதைத்தொடர்ந்து பேரையூரில் மறியலில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் உள்பட 42 பேரும், ஒத்தக்கடையில் மறியலில் ஈடுபட்ட கிழக்கு தாலுகா செயலாளர் பூமி ராஜன் உள்பட 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோன்று திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் 2-வது பஸ் நிறுத்தம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கந்தசாமி தலைமையில் பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி சாலை மறியல் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் தினகரமோகன், நகர செயலாளர் பிச்சைமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    திருநகர் போலீசார், மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 16 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    Next Story
    ×