search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயமான மீனவர்கள் 31-ந்தேதிக்குள் திரும்பி வராவிட்டால் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்: பி‌ஷப் வேண்டுகோள்
    X

    மாயமான மீனவர்கள் 31-ந்தேதிக்குள் திரும்பி வராவிட்டால் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்: பி‌ஷப் வேண்டுகோள்

    மாயமான மீனவர்கள் 31-ந்தேதிக்குள் திரும்பி வராவிட்டால் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் பி‌ஷப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நாகர்கோவில்:

    தூத்தூர் கல்லூரி கலையரங்கில் நேற்று மீனவர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை பேசியதாவது:-

    கடலில் மீனவர்கள் மாண்டு போவது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வு ஆகும். மத்திய, மாநில அரசுகள் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. தமிழகத்தின் கடைகோடி மாவட்டமாக இருப்பதால் என்னவோ? அரசின் பார்வை கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக கன்னியாகுமரி, தேங்காய்பட்டணம், குளச்சல் ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை மையமாக கொண்டு மீனவர்களை தேடும் பணிக்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேறவில்லை.

    30-ந்தேதி புயல் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 2-ந் தேதி வரை எந்த தேடுதல் வேட்டையும் நடக்கவில்லை. அதன்பிறகே தேடுதல் வேட்டை நடந்துள்ளது. 2, 3 நாட்கள் நீந்தி உயிருடன் மீட்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். 1-ந்தேதியே தேடுதல் வேட்டை நடத்தி இருந்தால் பல உயிர்களை நாம் காப்பாற்றி இருக்க முடியும். ஆழ்கடலில் மீன் பிடிக்க வசதியாக, விசைப்படகின் நீளத்தை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதி அளித்தால் அனைத்து படகுகளும் பதிவு செய்து விட்டு செல்வார்கள். நவீன ஒயர்லெஸ் கருவி வழங்க வேண்டும். தற்போது ஒக்கி புயலால் மாயமானவர்கள் வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் கண்டுபிடிக்காவிட்டால், அவர்கள் இறந்ததாக கருதி இறப்பு சான்றிதழ் வழங்கி, அரசு நிவாரண தொகையை உடனடியாக மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×