search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ.2 3/4 லட்சம் கொள்ளை
    X

    டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ.2 3/4 லட்சம் கொள்ளை

    அன்னூர் அருகே டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ.2 3/4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னூர்:

    கோவை அன்னூர் அருகே உள்ள செம்மானிசெட்டிப் பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி(வயது 47).

    இவர் பொன்னேகவுண்டன்புதூரில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றுகிறார். இதேகடையில் சம்பத்குமார் என்பவர் விற்பனையாளராக உள்ளார்.

    நேற்று இரவு விற்பனை முடிந்ததும் இருவரும் பணத்தை எண்ணினர். ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 420 இருந்தது. பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

    ரங்கசாமி அதேபகுதியில் வசிக்கும் தனது சகோதரியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். கோவில்பாளையம் சாலையில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.

    இதில் ரங்கசாமி நிலை குலைந்து கீழே விழுந்தார். அப்போது அரிவாள், கத்தியை காட்டி மிரட்டிய 3 பேரும் ரங்கசாமியிடம் இருந்த பணப்பையை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர். கொள்ளையர்கள் ரூ.2ž லட்சத்தை பறித்து சென்றது குறித்து ரங்கசாமி அன்னூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து பொன்னே கவுண்டன்புதூர் சாலையில் சிறிது தூரம் ஓடி விட்டு திரும்பி வந்தது. சம்பவ இடத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்களும் இல்லை.

    கொள்ளையர்கள் 3 பேரும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அடையாளம் தெரிய வில்லை என ரங்கசாமி கூறினார்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து இரவு மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. எனினும் சந்தேகத்திற்கிடமாக யாரும் சிக்கவில்லை. கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×