search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரச்சலூர் பள்ளி மாணவி தற்கொலை: அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்- செங்கோட்டையன் உறுதி
    X

    அரச்சலூர் பள்ளி மாணவி தற்கொலை: அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்- செங்கோட்டையன் உறுதி

    அரச்சலூரில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    ஈரோடு, அக். 21-

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பிரப் ரோட்டில் உள்ள கலைமகள் பள்ளி, செங்குந்தர் பள்ளி களில் படிக்கும் 852 மாணவ- மாணவிகளுக்கு இன்று மடி கணினி வழங்கப்பட்டது.

    அமைச்சர் செங்கோட் டையன் இலவச மடி கணினிகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி பாலமுரளி வரவேற்றார்.

    எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, செல்வகுமார சின்னையன் எம்.பி. ஆகி யோர் முன்னிலை வகித்த னர். அ.தி.மு.க. பகுதி செய லாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கே.சி.பழனிசாமி, கேசவமூர்த்தி, ஜெகதீஸ், அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் மாது என்கிற மதையன், ஆவின் ராஜேந்திரன், ஆவின் ராஜ சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் அமைச் சர் செங்கோட்டையன் நிருபர் களிடம் கூறியதாவது:-

    மாணவர்கள் நலன் கருதி அம்மா வழி நடக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. மாணவர்களின் அறவுத் திறனை அதிகரிக்கவும் அவர்களை சிறந்த விஞ் ஞானிகளாக்கவும் அட்டல் லேப் (அறிவியல் ஆய்வகம்) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தமிழகத் தில் 12 இடங்களில் செயல் படுத்தப் படும். அனைத்து இடங்களிலும் தொடங்க முயற்சி மேற்கொள் ளப்படும்.

    இது அமைக்கப்பட்டால் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள விஞ்ஞானிகள் போல நமது மாணவர்களும் திகழ்வார்கள். 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் வகுப்பறைகள் ரூ.486 கோடி செலவில் கணினி மயமாக்கப்படும். மாணவர்களுக்கு விபத்து காப்பீடு ஏற்படுத்தப்படும்.

    மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் 412 தேர்வு மையங்கள் அமைக் கப்படும். அந்த மையங்கள் நவம்பர் இறுதிக்குள் அமைக் கப்படும்.

    அரச்சலூரில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகா ரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடி வில் சம்பந்தப் பட்டவர்கள் மீது அரசு உரிள நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×