search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரோலில் வந்த சசிகலாவை நேரில் சென்று சந்திக்காதது ஏன்?: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
    X

    பரோலில் வந்த சசிகலாவை நேரில் சென்று சந்திக்காதது ஏன்?: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

    பரோலில் வந்த சசிகலாவை நேரில் சென்று சந்திக்காதது ஏன் என்று தூத்துக்குடியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில் அளித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பெரியம்மை நோய், இளம் பிள்ளைவாதம் ஆகிய நோய்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். உலக அளவில் கொடிய நோய்கள் இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்து இருப்பது தமிழகம். இதனை யாரும் மறுக்க முடியாது. டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை அதனை பரப்பும் கொசுக்கள் வித்தியாசமானதாக உள்ளது. இது நல்ல தண்ணீரில் உற்பத்தியாகிறது. பகலில் கடிக்கிறது. இந்த கொசுக்கள் வீட்டுக்கு உள்ளேயும் உருவாகி வருகிறது.

    இதனை தடுக்க அரசு திட்டங்களை தீட்டி, நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் திட்டங்கள் வெற்றி பெறாது. ஒட்டுமொத்த மக்களின் ஒத்துழைப்பை பெறுவதற்காக அதிதீவிரமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த விழிப்புணர்வு வெற்றி பெறும்போது, டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் இருக்காது.

    தற்போது டெங்குவால் பாதிக்கப்படுகிற நோயாளிகள் சிகிச்சை பெற முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தில் ரூ.2 ஆயிரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சல் தொடர்பான அனைத்து பரிசோதனையும் செய்யும் வகையில் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளன. 4 ஆயிரம் டாக்டர்கள் டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    என்னை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து டி.டி.வி.தினகரன் நீக்கிவிட்டு புதிதாக 2 பேரை நியமித்து உள்ளார். அப்படியென்றால், நீங்கள் எங்களுக்கு தேவை இல்லை என்று கூறுவதாகத்தானே அர்த்தம். அதற்கு பிறகு நாங்கள் எப்படி பரோலில் வந்த சசிகலாவை பார்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×