search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை, நாகை, திருவாரூரில் வேகமாக பரவி வரும் ‘டெங்கு’ - மூளை காய்ச்சலுக்கு சிறுமி பலி
    X

    தஞ்சை, நாகை, திருவாரூரில் வேகமாக பரவி வரும் ‘டெங்கு’ - மூளை காய்ச்சலுக்கு சிறுமி பலி

    தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. நாகை அருகே ஆரியங்நாடு பகுதியை சேர்ந்த சிறுமி முத்துமாரி மூளை காய்ச்சலால் இறந்தார்.
    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் ஏராளமான பேர் டெங்கு, வைரஸ், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலால் இதுவரை பேர் பலியாகி உள்ளனர். மேலும் 210 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தஞ்சையில் இதுவரை 23 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனி சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு நோயாளிகளுக்கு டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.

    நாகை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, தரங்தம்பாடி, வேதாரண்யம், குத்தாலம் ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 20 சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நாகை அருகே ஆரியங்நாடு பகுதியை சேர்ந்த சிறுமி முத்துமாரி மூளை காய்ச்சலால் இறந்தார்.

    திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை டெங்குவால் 6 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் சுமார் 192 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    Next Story
    ×