search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவன் பலி
    X

    திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவன் பலி

    திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேட்டுப்பட்டி அமிர்தம் காடு தெருவை சேர்ந்தவர் ஜான்கென்னடி. இவரது மகன் ராபின் (வயது15). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராபினுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.

    ஆனால் காய்ச்சல் குறையவில்லை. இதனைத் தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்ததில் ராபினுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் ராபின் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராபின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது குறித்து டாக்டர்கள் தெரிவிக்கையில், 2 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் அரசு ஆஸ்பத்திரிக்கு கண்டிப்பாக வர வேண்டும். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து இறுதிகட்டத்தில் அரசு ஆஸ்பத்திரியில் சேருவதால் எளிதில் குணப்படுத்த முடிவதில்லை என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×