search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது அணை பிரச்சினை: விவசாயிகளை காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும் - என்.ஆர்.தனபாலன்
    X

    மேகதாது அணை பிரச்சினை: விவசாயிகளை காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும் - என்.ஆர்.தனபாலன்

    மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் விவகாரத்தில், தமிழக விவசாயிகளை காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும் என்று என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. அதனை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளது. இந்த வழக்கில் வாதாடிய தமிழக அரசின் வக்கீல் சேகர்நாப்தே கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் தடையில்லை என்றால் புதிய தடுப்பணை கட்டுவதில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று கூறியுள்ளார்.

    இது தமிழக அரசின் நிலைபாடுதானா? இல்லை வழக்கறிஞர் தானாக இந்த கருத்தை பதிவு செய்துள்ளாரா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். மேகதாதுவில் புதிய தடுப்பணை கட்டும் பட்சத்தில் தமிழகத்திற்கு சிறிதளவு கூட தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை தமிழக அரசின் வக்கீலும், தமிழக அரசும் உணர மறுப்பது ஏன் என்று புரியவில்லை.

    மேகதாதுவில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க ஒத்துக்கொண்டால் அது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் ஆகும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டு விடும்.

    ஏற்கனவே தமிழகத்தில் விவசாயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விவசாயிகள் வறண்டு கிடக்கும் நிலையில் மேலும் தமிழகத்தில் விவசாயத்தை வேரறுத்து விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர வாழ்வதற்கான வழிமுறையே இல்லை.

    இதனை தமிழக அரசு நன்கு உணர்ந்து ஏற்கனவே உயிருக்கும், உடமைக்கும், வாழ்வாதாரத்திற்கும் போராடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளை காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×