search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு: துரோகம் இழைத்த முதல்வர், அமைச்சர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
    X

    நீட் தேர்வு: துரோகம் இழைத்த முதல்வர், அமைச்சர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

    நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு துரோகம் இழைந்த முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு கோரி அவசர சட்டம் இயற்றினால், அதற்கு ஒத்துழைப்ப்பு அளிக்க மத்திய அரசு தயார் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.

    தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’கிராமப்புற மாணவர்கள் பாதிப்பார்கள் என்பதை விளக்கி தனி அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மட்டும் இந்த விலக்கு பொருந்தும். நிரந்தர விலக்கு அளிக்க முடியாது’ என்றார்.

    இதனையடுத்து, நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்ட வரைவு நாளை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.



    இந்நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு துரோகம் இழைந்த முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், “நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு சமூக நீதியை சாகடித்துள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் கபட நாடகம் நடத்தி முதலமைச்சர் மாணவர்களை ஏமாற்றியுள்ளார்

    தமிழக அரசின் இரு மசோதாக்களும் ஜனாதிபதி ஒப்புதலுக்கே அனுப்பப்படவில்லை. தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்.

    அதிமுக எம்.பி.க்கள், முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர்கள் அனைவரும் தோல்வியை ஒப்புக் கொண்டு பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். நீட் தேர்வு முடிந்து போன பிரச்சனை என தம்பிதுரை தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அனைத்து மாநிலங்கள் மீது நீட் தேர்வை வலிந்து திணித்துள்ளது” என்றார்.
    Next Story
    ×