search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக 6 கிராம மக்கள் சாலை மறியல்
    X

    பெரியகுளம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக 6 கிராம மக்கள் சாலை மறியல்

    பெரியகுளம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக 6 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக பல்வேறு இடங்களில் அதிகாரிகள் இடம் தேடினர். இதில் கோகிலாபுரம் சாலையில் டாஸ்மாக் கடை திறக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

    பின்பு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இக்கடை திறக்கப்பட்டால் அப்பகுதி பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஜெயமங்கலம், கோகிலாபுரம், குள்ளபுரம், பொம்மிநாயக்கன் பட்டி, நடுப்பட்டி, சிந்நுவம்பட்டி ஆகிய 6 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் தேவதானப்பட்டி 4 முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த ஜெயமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராமமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதை கிராம மக்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பொதுமக்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்பு மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×