search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய பாலத்தில் எம்.எல்.ஏ. சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.
    X
    புதிய பாலத்தில் எம்.எல்.ஏ. சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.

    திருப்பூரில் புதிதாக கட்டும் மேம்பாலத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சார்பில் அறிவிப்பு பலகை

    திருப்பூரில் புதிதாக கட்டும் மேம்பாலத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரன் சார்பில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் டி.எம்.எப். மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணி மெதுவாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பஸ் நிலையத்தில் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    இந்நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரன் சார்பில் பாலத்தில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில் இந்த பாலம் கட்டும் பணியால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    எனவே கீழ் பாலம் மட்டுமாவது விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடும்படி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பல முறை தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் வலியுறுத்தியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளனர்.

    இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் அனைத்து வேலைகளும் முடித்து பாலத்தை திறந்து விடவேண்டும். இல்லையென்றால் நாளை (27-ந்தேதி) நானே எனது தலைமையின் கீழ் பாலத்தை மட்டும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க நேரிடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அவரிடம் கேட்டபோது பேனர் வைத்தது நான் தான். பொதுமக்களின் நலனுக்காக விதிமுறைகளையும் மீறி, எந்த விளைவுகள் வந்தாலும் கவலைப்படாமல் நாளை காலை பாலத்தை திறந்து வைப்பேன் என்றார். ஏற்கனவே அதிகாரிகளை கண்டித்து இவர் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×