search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எண்ணூர் துறைமுகத்தில் புதிய சரக்கு பெட்டக முனையம் நிதின் கட்காரி நாளை திறந்து வைக்கிறார்
    X

    எண்ணூர் துறைமுகத்தில் புதிய சரக்கு பெட்டக முனையம் நிதின் கட்காரி நாளை திறந்து வைக்கிறார்

    எண்ணூர் துறைமுகத்தில் ரூ. 724 கோடி செலவில் புதிய சரக்கு பெட்டக முனையத்தை மத்திய மந்திரி நிதின் கட்காரி நாளை திறந்து வைக்கிறார்.
    பொன்னேரி:

    எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அதானி குழுமம் சார்பில் ரூ. 1,270 கோடியில் புதிய அதிநவீன சரக்கு பெட்டக முனையம் அமைக்க கடந்த 2014-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

    இதில் தற்போது ரூ. 724 கோடியில் சரக்கு பெட்டக முனையம் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.

    புதிய சரக்கு பெட்டக முனையத்தை மத்திய மந்திரி நிதின் கட்காரி நாளை (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கிறார். விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். இந்த புதிய சரக்கு பெட்டக முனையத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் கண்டெய்னர்களை கையாள முடியும்.

    இதேபோல் செட்டிநாடு நிறுவனம் சார்பில் ரூ. 151 கோடியில் அமைக்கப் பட்டுள்ள பலசரக்கு முனை யம், சரக்கு ரெயில் பாதை இணைப்பு மின்னனு அலு வலகம் ஆகியவற்றையும் நிதின் கட்கரி திறந்து வைக்கிறார்.

    Next Story
    ×