search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கும் தனியார் கல்லூரி பயிற்சி நர்சுகள்
    X

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கும் தனியார் கல்லூரி பயிற்சி நர்சுகள்

    புற நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், காயங்களுக்கு கட்டு போடுதல், ஊசி போடுதல் உள்ளிட்ட பணிகளுக்காக தனியார் கல்லூரிகளில் இருந்து பயிற்சி நர்சுகள் இன்று திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக உள்ளனர்.

    டாக்டர்களின் போராட்டம் காரணமாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது பாதிக்கப்பட்டு உள்ளது.

    நேற்று மதியம் உரிய சிகிச்சை கிடைக்காமல் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை டாக்டர்களின் போராட்டம் 15-வது நாளாக நீடித்தது. டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் இன்று போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இதற்கிடையே புற நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், காயங்களுக்கு கட்டு போடுதல், ஊசி போடுதல் உள்ளிட்ட பணிகளுக்காக தனியார் கல்லூரிகளில் இருந்து பயிற்சி நர்சுகள் இன்று காலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வந்து இருந்தனர்.

    அவர்கள் நோயாளிகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து வருகிறார்கள். தனியார் கல்லூரியில் இருந்து பயிற்சி நர்சுகள் வரவழைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அதிகாரிகள், டாக்டர்களிடம் கேட்டபோது எதுவும் கூற மறுத்து விட்டனர்.

    Next Story
    ×