search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக திருவள்ளூர் மாவட்டத்தில் 63 மதுக்கடைகள் மீண்டும் திறப்பு
    X

    மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக திருவள்ளூர் மாவட்டத்தில் 63 மதுக்கடைகள் மீண்டும் திறப்பு

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் 63 மதுக்கடைகள் மீண்டும் திறக்கபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    திருவள்ளூர்:

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

    மூடப்பட்ட கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

    இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல இடங்களில் பெண்கள் போராட்டத்தில் குதித்து மதுக்கடைகளை சூறையாடினர்.திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் நெடுஞ்சாலைகளில் செயல்பட்ட 167 கடைகள் மூடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மூடிய டாஸ்மாக் கடைக்கு பதில் 63 மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. மீதி உள்ள 104 கடைகளை திறக்க இடத்தை தேர்வு செய்யும் பணி பல இடங்களில் நடந்து வருகின்றன.

    பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தற்போது திறந்திருக்கும் கடை அருகிலேயே மீதி உள்ள மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது.
    Next Story
    ×