search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கெர்பர், பெர்டிச் காலிறுதிக்கு தகுதி
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கெர்பர், பெர்டிச் காலிறுதிக்கு தகுதி

    ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் சுவிகெய்ஷ்-யை வீழ்த்தி ஏஞ்சலிக் கெர்பர் காலிறுதிக்கு முன்னேறினார். #AusOpen #Kerber
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 21-ம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி)- சுவிகெய்ஷ் (சீன தைபே) மோதினார்கள்.

    இதில் கெர்பர் 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். அவர் காலிறுதியில் 17-ம் நிலை வீராங்கனையான மேடிசன் கெய்சை சந்திக்கிறார்.

    மேடிசன் 4-வது சுற்றில் 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் 8-ம் நிலை வீராங்கனையான கார்சியாவை (பிரான்ஸ்) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார்.

    ஏற்கனவே வோஸ்னியாக்கி (டென் மார்க்), சுராஸ் (ஸ்பெயின்), சுவிட்டோலினா (உக்ரைன்), மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 19-ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச்- பேபியோ போக்னி (இத்தாலி) மோதினார்கள். இதில் பெர்டிச் 6-1, 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். அவர் காலிறுதியில் பெடரர் (சுவிட்சர்லாந்து) அல்லது மார்டான் புசோவிசை (அங்கேரி) சந்திக்கிறார்.

    மற்ற காலிறுதி ஆட்டங்களில் ரபெல் நடால் (ஸ்பெயின்)- சிலிச் (குரோஷியா), எட்மன்ட் (இங்கிலாந்து)- டிமிட்ரோவ் (பல்கேரியா) மோதுகிறார்கள். மற்ற 4-வது சுற்று ஆட்டங்களில் ஜோகோவிச் (செர்பியா)- சங் (தென்ஆப்பிரிக்கா), டொமினிக் தியம் (ஆஸ்திரியா)- டெனிஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள். #AusOpen #Kerber
    Next Story
    ×