search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: பிஞ்ச் சதம்,  ஆஸ்திரேலியா 304-8
    X

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: பிஞ்ச் சதம், ஆஸ்திரேலியா 304-8

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. #AUSvsENG #MelbourneODI

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி 4-0 என கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. 

    முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் பந்துவிச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். வார்னர் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் மார்க் உட் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 23 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 



    அதன்பின் பிஞ்ச்-உடன் மிச்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்குவித்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். டிராவிஸ் ஹெட் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். பிஞ்ச் சதம் அடித்தார். அவர் 107 ரன்களில் மோயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டாயின்ஸ் 40 பந்துகளில் 60 ரன்கள் (5 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். டிம் பெய்ன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.



    ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி பந்துவீச்சில் லியாம் பிளங்கீட் 3 விக்கெட்களும், அடில் ரஷித் 2 விக்கெட்களும், மோயின் அலி, மார்க் உட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #AUSvsENG #MelbourneODI
    Next Story
    ×