search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபனுக்கான தரவரிசையில் நடால் முதலிடம், பெடரர் 2-வது இடம்
    X

    ஆஸ்திரேலிய ஓபனுக்கான தரவரிசையில் நடால் முதலிடம், பெடரர் 2-வது இடம்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசையில் நடால் முதலிடமும், பெடரர் 2-வது இடமும் பிடித்துள்ளனர். பெண்களில் முகுருசா முதல் இடத்தை பிடித்துள்ளார். #ausopen
    2018-ம் ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வருகிற 15-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு தரவரிசை வழங்கப்பட்டு அதன்படி போட்டி அட்டவணை தயாரிக்கப்படும். இதனடிப்படையில் ஆண்கள் ஒற்றையருக்கான பிரிவில் ரபேல் நடால் முதல் இடத்தை பிடித்துள்ளார்.



    நடப்பு சாம்பியன் பெடரர் 2-வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த வருடம் காயத்தால் நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்து ஆஸ்திரேலிய ஓபனுக்கு திரும்பியதால் பெடரர் 17-வது இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் விலகியதால் சிமோனா ஹாலேப் முதல் இடத்தை பிடித்துள்ளார். கரோலின் வோஸ்னியாக்கி 2-வது இடத்தையும், முகுருசா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். #ausopen #nadal #Federer
    Next Story
    ×