search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்டிங் சராசரியில் டான் பிராட்மேனை முந்திய ஆப்கானிஸ்தான் வீரர்
    X

    பேட்டிங் சராசரியில் டான் பிராட்மேனை முந்திய ஆப்கானிஸ்தான் வீரர்

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19-வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரரான பகீர் ஷா, டான் பிராட்மேனின் பேட்டிங் சராசரி சாதனையை முறியடித்துள்ளார். #BaheerShah #battingaverage #DonBradman

    காபுல்:

    சமீப காலமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நன்றாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த அணியின் ரஷித் கான் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதுதவிர முகமது நபி, முகமது ஷசாத், நஜிப் சத்ரான் உள்ளிட்டோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், அந்த அணிக்கு கூடுதல் பலம் அழிக்கும் வகையில் மற்றொரு சாதனையை அந்நாட்டின் 19-வயதுக்குட்பட்ட அணியை சேர்ந்த பேட்ஸ்மேனான பகீர் ஷா படைத்துள்ளார். பகீர் ஷா, 12 முதல்தர இன்னிங்சில் பேட்டிங் செய்து 1096 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 121.77 ஆகும். அவரது அறிமுக போட்டியில் பகீர் ஷா 256 ரன்கள் அடித்து அசத்தினார். இது அறிமுக போட்டியில் ஒரு வீரரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும்.



    இதன்மூலம், கிரிக்கெட் ஜாம்பவனான டான் பிராட்மேனின் சாதனையை பகீர் ஷா முறியடித்துள்ளார்.  டான் பிராட்மேன், 80 இன்னிங்சில் 29 சதங்களுடன் 6996 ரன்கள் குவித்துள்ளார. சராசரி 99.94 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் மிகச் சிறந்த சராசரி ஆகும். #BaheerShah #battingaverage #DonBradman #tamilnews
    Next Story
    ×