search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    44 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து வெற்றிக்கு உதவிகரமாக இருந்த ராஸ் டெய்லர்
    X
    44 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து வெற்றிக்கு உதவிகரமாக இருந்த ராஸ் டெய்லர்

    3-வது ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி: வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஷ் செய்தது

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றியது நியூசிலாந்து.
    நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், இன்று கிறிஸ்ட்சர்ச்சில் 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் வொர்க்கர், கொலின் முன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வொர்க்கர் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முன்ரோ 21 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ப்ரூம் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.


    மழைக்காரணமாக ஆடுகளம் மூடப்பட்டிருந்த காட்சி

    இதனால் நியூசிலாந்து 26 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து. 4-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லருடன் கேப்டன் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது.

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நியூசிலாந்து 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால், ஆட்டம் 23 ஓவராக குறைக்கப்பட்டது.


    கெய்ல் விக்கெட்டை கைப்பற்றிய ஹென்றியை பாராட்டும் போல்ட்


    மேலும் நான்கு ஓவர்களே இருந்ததால் நியூசிலாந்து அணிக்கு அடித்து விளையாடும் நிலை ஏற்பட்டது. 20-வது ஓவரில் லாதம் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் விளாசினார். 21-வது ஓவரை மில்லர் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் லாதம் ஆட்டம் இழந்தார். அவர் 42 பந்தில் 5 பவுண்டரியுடன் 37 ரன்கள் சேர்த்தார். அடுத்து நிக்கோல்ஸ களம் இறங்கினார். 22-வது ஓவரை நர்ஸ் வீசினார். இந்த ஓவரில் நிக்கோல்ஸ் இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.


    34 ரன்கள் சேர்த்த ஹோல்டர்

    கடைசி ஓவரில் நிக்கோல்ஸ் ஒரு பவுண்டரியும், டெய்லர் இரண்டு பவுண்டரியும் அடிக்க நியூசிலாந்து 23 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. டெய்லர் 47 ரன்களும், நிக்கோல்ஸ் 18 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். மழைக்கு பின்னர் ஆட்டம் தொடங்கியதும் கடைசி நான்கு ஓவரில் 48 ரன்கள் குவித்தது.

    டாக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 23 ஓவரில் 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 138 பந்தில் 166 ரன்கள் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் ஹேல்டரை (21 பந்தில் 34 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 73 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது.


    20 ரன் எடுத்து கடைசி வரை போராடிய மில்லர்

    கடைசி விக்கெட்டுக்கு மில்லர் - கேப்ரில் ஜோடி சுமார் 7 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியது. இதனால் நியூசிலாந்து 23 ஓவரில் ஆல்அவுட் ஆகாமல் 99 ரன்கள் எடுத்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி நியூசிலாந்து 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் 20 ரன்னுடனும், கேப்ரியல் 12 ரன்னுடனும் களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர். போல்ட், சான்ட்னெர் தலா 3 விக்கெட்டும், ஹென்றி 2 விக்கெடெ்டும் வீழ்த்தினார்கள்.


    3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய சான்ட்னெர்

    இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளையும் வென்ற நியூசிலாந்து வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது. ராஸ் டெய்லர் ஆட்ட நாயகன் விருதும், போல்ட் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

    இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×