search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 216 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை
    X

    3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 216 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை

    விசாகப்பட்டினத்தில் நடைபெற வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் ஆடிய இலங்கை 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதற்கான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தனுஷ்கா குணதிலகாவும், உபுல் தரங்காவும் களமிறங்கினர். குணதிலகா 13 ரன்கள் மட்டுமே எடுத்து பும்ரா பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து தரங்காவுடன், சதீரா சமரவிக்ரமா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்குவித்தனர். தரங்கா, பாண்டியா வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து ஐந்து பவுண்டரிகள் அடித்து அசத்தினார். சதீரா சமரவிக்ரமா 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹால் பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக மேத்யூஸ் களமிறங்கினார். மற்றொரு முனையில் அதிரடியாக விளையாடிய தரங்கா அரைசதம் அடித்தார்.

    சிறப்பாக விளையாடிய தரங்கா, சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  95 ரன்களில், குல்தீப் யாதவ் பந்தில் டோனியின் திறமையான ஸ்டெம்பிங்கால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது இலங்கை அணி 27.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களமிறங்கியவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.



    மேத்யூஸ் (17), நிரோஷன் டிக்வெல்லா (8)  திசாரா பெரெரா (6), சசித் பதிரானா (7), அகிலா தனன்ஜெயா (1), சுரங்கா லக்மல்(1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அசெலா குணரத்னே மற்றும் ஒரு முனையில் 51 பந்துகள் நிலைத்துநின்று விளையாடி 17 ரன்கள் எடுத்து இறுதியாக ஆட்டமிழந்தார். 



    இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சஹால் தலா 3 விக்கெட்களும், பாண்டியா 2 விக்கெட்டும், பும்ரா, புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர். சஹால் வீசிய 10 ஓவர்களில் 3 மேய்டன் ஓவர்களும் அடங்கும். 

    இதன்முலம் இலங்கை அணி, இந்திய அணிக்கு 216 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.
    Next Story
    ×