search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொகாலி ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை டாஸ் வென்று பீல்டிங் தேர்வு; வாஷிங்டன் சுந்தர் அறிமுகம்
    X

    மொகாலி ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை டாஸ் வென்று பீல்டிங் தேர்வு; வாஷிங்டன் சுந்தர் அறிமுகம்

    இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய உள்ள இந்திய அணியில் தமிழக விரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    மொகாலி:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இது இந்திய அணிக்கு வாழ்வா-சாவா போட்டியாகும். இதிலும் மண்ணை கவ்வினால், சொந்த மண்ணில் இலங்கையுடன் தொடரை இழந்ததில்லை என்ற நீண்ட கால பெருமையை பறிகொடுக்க வேண்டி இருக்கும்.

    இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டி செய்ய உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி சரியாக 11:30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணியில் முதன்முறையாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார். ஆல்-ரவுண்டர் குல்தீப் யாதவுக்கு பதிலாக சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு வேகப்பந்து, இரண்டு சுழற்பந்து மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் இந்தியா களம் இறங்குகிறது.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1.ரோகித் சர்மா (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. மணீஷ் பாண்டே, 5. தினேஷ் கார்த்திக், 6. எம்.எஸ். டோனி (விக்கெட் கீப்பர்), 7. ஹர்திக் பாண்டியா, 8. புவனேஸ்வர் குமார், 9.வாஷிங்டன் சுந்தர், 10. பும்ரா, 11. சாஹல்.



    இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. உபுல் தரங்கா, 2. தனுஷ்கா குணதிலகா, 3. திரிமானே, 4. மேத்யூஸ், 5. அசேலா குணரத்னே, 6. நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), 7. திசாரா பெரேரா (கேப்டன்), 8. சசித் பதிரனா, 9. சுரங்கா லக்மல், 10. அகிலா தனஞ்ஜெயா, 11. நுவான் பிரதீப்.
    Next Story
    ×