search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்து கேப்டனாக டாம் லாதம் நியமனம்
    X

    ஒருநாள் கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்து கேப்டனாக டாம் லாதம் நியமனம்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று வகை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றுடன் முடிவடைந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 எனக்கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 23-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 26-ந்தேதியும் தொடங்குகிறது.



    இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20-ந்தேதி நடக்கும் முதல் போட்டியில் மட்டும் கேப்டன் வில்லியம்சன் விளையாடுவார். கடைசி இரண்டு போட்டியில் அவருக்கு ஓய்வு அளி்க்கப்பட்டுள்ளது. இதனால் டாம் லாதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதேபோல் டிம் சவுத்தியும் முதல் போட்டியில் மட்டும் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் இவர்களுக்குப் பதிலாக நீல் ப்ரும், சான்ட்னெர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேன் வில்லியம்சன் (கேப்டன்- முதல் போட்டி), 2. டோட் ஆஸ்ட்லே, 3. ட்ரென்ட் போல்ட், 4. கொலின் டி கிராண்ட்ஹோம், 5. பெர்குசன், 6. மாட் ஹென்ரி, 7. டாம் லாதம் (கடைசி 2 போட்டிக்கு கேப்டன்), 8. ஆடம் மில்னே, 9. கொலின் முன்றோ, 10. ஹென்ரி நிக்கோல்ஸ், 11. டிம் சவுத்தி (முதல் ஒருநாள் போட்டி), 12. ராஸ் டெய்லர், 13. ஜார்ஜ் வொர்க்கர், 14. நீல் ப்ரூம் (கடைசி இரண்டு போட்டிகள்), 15. மிட்செல் சான்ட்னெர் (கடைசி இரண்டு போட்டிகள்).
    Next Story
    ×