search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் எல் கிளாசிகோ ஆட்டத்தின் நேரம் மாற்றியமைப்பு
    X

    இந்திய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் எல் கிளாசிகோ ஆட்டத்தின் நேரம் மாற்றியமைப்பு

    இந்திய ரசிகர்கள் பார்க்கும் வகையில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான எல் கிளாசிகோ போட்டியின் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.
    கால்பந்து போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு இணையாக ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் பிரிமீயர் லீக், லா லிகா, லீக்-1, பண்டேஸ்லிகா உள்ள பல்வேறு தொடர்களுக்கும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

    இதில் ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா தொடர் முக்கியத்தும் வாய்ந்தது. இந்த தொடரில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் இடையே நடைபெறும் போட்டியை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்ப்பார்கள். இந்த போட்டிக்கு எல் கிளாசிகோ என்று பெயர்.

    2017-18 சீசனின் முதல் எல் கிளாசிகோ போட்டி எப்போது நடைபெறும் என்று ரசிகர் எதிர்பார்த்த நிலையில் தற்போது அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 23-ந்தேதி பார்சிலோனா - ரியல் மாட்ரிட் பலப்பரீட்சை நடத்துகிறது.



    பொதுவாக லா லிகா ஆட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்குதான் நடைபெறும். இந்திய ரசிகர்களை ஈரக்கும் வகையில் போட்டியை பார்ப்பதற்கு வசதியாக மாலை 5.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிக அளவில் இந்த ஆட்டத்தை பார்த்து ரசிபார்கள் என லா லிகா அமைப்பு நினைக்கிறது.

    பார்சிலோனா - ரியல் மாட்ரிட் இடையிலான போட்டியை சோனி மேக்ஸ் ஒளிபரப்பு செய்கிறது. இந்த போட்டியை பார்ப்பதற்காக டெல்லியில் ராட்சத திரை அமைக்கப்பட இருக்கிறது.
    Next Story
    ×