search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்தீப் யாதவ், சாஹலை எதிர்கொள்வதில்தான் முக்கிய கவனம்: நியூசி. பேட்ஸ்மேன் சொல்கிறார்
    X

    குல்தீப் யாதவ், சாஹலை எதிர்கொள்வதில்தான் முக்கிய கவனம்: நியூசி. பேட்ஸ்மேன் சொல்கிறார்

    இந்திய அணியின் தரமான சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் பந்துவீச்சை எதிர்கொள்வதுதான் முக்கிய கவனம் என நியூசிலாந்து பேட்ஸ்மேன் கூறியுள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (22-ந்தேதி) தொடங்குகிறது. இதற்குமுன் இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிராக நியூசிலாந்து அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மோதியது.

    முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் குவித்தது. ராஸ் டெய்லர் 102 ரன்னும், பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பர் டாம் லாதம் 108 ரன்னும் எடுத்தனர்.



    பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்த லாதம், ‘‘இந்தியாவிற்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பதில்தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    ‘‘எங்களுடைய முழுக் கவனமும் ஸ்பின் பந்திற்கு எதிராக விளையாடுவதுதான். வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதை விட இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு எப்படி ரன்கள் குவிப்பது, பவுண்டரிகள் அடிக்கும் வழியைத் தேடுவதில் கவனம் செலுத்தி வருகிறோம். பொதுவாகவே பெரிய விஷயம் இதுதான்.



    சில இடது கை சுழற்பந்து விச்சாளர்கள் மற்றும் கரண் சர்மா பந்து வீச்சை எதிர்கொண்டது அதற்கான தயார் படுத்திய நோக்கம்தான். குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் சிறந்த பந்து வீச்சாளர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்’’ என்றார்.
    Next Story
    ×