search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    U-17 உலகக்கோப்பை கால்பந்து: கடைசி லீக் போட்டியிலும் இந்திய அணி தோல்வி
    X

    U-17 உலகக்கோப்பை கால்பந்து: கடைசி லீக் போட்டியிலும் இந்திய அணி தோல்வி

    17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இந்திய அணி கானா அணியிடம் தோல்வியடைந்தது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 6-ம் தேதி தொடங்கியது. நேற்று (12-ம் தேதி) நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

    புதுடெல்லியில் 8 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - கானா அணிகள் மோதின. இப்போட்டியில் கானா 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. கானா அணியின் எரிக் அயியா 43-வது மற்றும் 52-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். அதைத்தொடர்ந்து ரிச்சர்ட் டான்சோ 86-வது நிமிடத்திலும், இம்மானுவேல் டோகு 87-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.



    முன்னதாக 5 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் ‘பீ’ பிரிவில் இடம்பிடித்துள்ள நியூசிலாந்து - மாலி அணிகள் மோதின. இப்போட்டியில் மாலி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மாலி அணி தரப்பில் சலாம் 18-வது நிமிடத்திலும், ஜெமவுசா 50-வது நிமிடத்திலும், நிதியாயே 82-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நியூசிலாந்து அணியின் ஸ்பிராங் 72-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.



    நவிமும்பையில் 5 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் ‘பீ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பராகுவே - துருக்கி அணிகள் மோதின. இப்போட்டியில் பராகுவே அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பராகுவே அணியின் பொகடோ 41-வது நிமிடத்திலும், கார்டோசோ 43-வது நிமிடத்திலும், கலியானோ 61-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். துருக்கி அணியின் கேரெம் 93-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.



    முன்னதாக 8 மணிக்கு தொடங்கிய மற்றொரு ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் அமெரிக்கா - கொலம்பியா அணிகள் மோதின. இப்போட்டியில் கொலம்பியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கொலம்பியாவின் விடல் 3-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அமெரிக்காவின் அகொஸ்டா 24-வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார். அடுத்து கொலம்பியாவின் பினலோசா 67-வது நிமிடத்திலும், கைசிடோ 87-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

    இன்று (13-ம் தேதி) நடைபெறும் ‘சி’ பிரிவு லீக் போட்டிகளில் கோஸ்டரிக்கா - ஈரான், கினியா - ஜெர்மனி அணிகளும், ‘டீ’ பிரிவு லீக் போட்டிகளில் நைஜர் - பிரேசில், ஸ்பெயின் - வடகொரியா அணிகளும் பலப்பரீட்சை செய்கின்றன.
    Next Story
    ×