search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பான் ஓபன்: 2-வது சுற்றில் ஒகுஹாராவிடம் பி.வி.சிந்து தோல்வி
    X

    ஜப்பான் ஓபன்: 2-வது சுற்றில் ஒகுஹாராவிடம் பி.வி.சிந்து தோல்வி

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாராவிடம் நேர்செட் கணக்கில் பி.வி. சிந்து தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.
    இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து கடந்த வாரம் நடைபெற்ற கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற சாதனைப் படைத்தார். இறுதிப் போட்டியில் பலம்வாய்ந்த ஜப்பான வீராங்கனையான நொசோமி ஒகுஹாராவை வீழ்த்தியிருந்தார்.

    அதற்கு முன் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு ‘இனிமையான பழிவாங்கல்’ என கொரிய ஓபன் வெற்றியை எடுத்துக் கொள்ளலாம் என்று சிந்து கூறியிருந்தார்.

    இந்நிலையில் தற்போது ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து, சாய்னா நேவால் ஆகியோருக்கு 2-வது சுற்று கடுமையாக இருக்கும் வகையில் அட்டவணை அமைந்திருந்தது.

    பிவி சிந்து 2-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். இன்று நடைபெற்ற இந்த போட்டியில் சொந்த ஊரில் நொசோமி ஒகுஹாரா மிகவும் அபாரமாக விளையாடினார்.

    இதனால் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டின் பாதி நேரத்தின்போது பிவி சிந்து 11-9 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் ஜப்பான் வீராங்கனை 15-11 என முன்னிலைப் பெற்றார்.



    பின்னர் பிவி சிந்து தொடர்ந்து ஐந்து புள்ளிகள் பெற ஸ்கோர் 16-16 என சமநிலைப் பெற்றது. பின்னர் ஒகுஹாரா சிறப்பாக விளையாட, பிவி சிந்து 18-21 என முதல் செட்டை இழந்தார்.

    முதல் செட்டில் அதிக அளவில் தவறு செய்த பிவி சிந்து, 2-வது செட்டிலும் தவறுகள் செய்தார். இதனால் 2-வது செட்டை 8-21 என எளிதில் இழந்தார். இதனால் 0-2 என பிவி சிந்து தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
    Next Story
    ×