search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து - காஷ்யப் முதல் தடையை கடந்தனர்
    X

    கொரிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து - காஷ்யப் முதல் தடையை கடந்தனர்

    கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, காஷ்யப் ஆகியோர் முதல் தடையை கடந்துள்ளனர்.
    சியோல்:

    கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, காஷ்யப் ஆகியோர் முதல் தடையை கடந்துள்ளனர்.

    தென்கொரியாவின் சியோல் நகரில் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஹாங்காங் வீராங்கனை சியங் நிகன் யி-ஐ 21-13, 21-8 என்ற நேர்செட்களில் வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டியில் வெற்றி பெற சிந்துவுக்கு 34 நிமிடங்களே தேவைப்பட்டது.

    இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் பருபள்ளி காஷ்யப் வெற்றி பெற்றுள்ளார். இவர் சீன தைபே வீரர் ஹிசு ஜெ ஹாவ்-ஐ 21-13, 21-16 என்ற நேர்செட்களில் 35 நிமிடங்களில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் காஷ்யப், தென்கொரியாவின் முன்னணி வீரர் சான் வாய் ஹாவோ எதிர்கொள்கிறார்.

    இதேபோல் சமீர் வர்மா, தாய்லாந்து வீரரை 21-13, 21-23, 21-9 என்ற செட்கணக்கில் வென்றார். சாய் பிரனீத் சீன வீரரை வீழ்த்தி 2-ம் சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிரக் ஜோடியும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. சாத்விக்-அஷ்வினி ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவில் தோல்வி அடைந்தது.

    இதேபோல் அஷ்வினி-சிக்கி ரெட்டிஜோடி மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதேபோங்ல பிரனோய் ஒற்றையர் பிரிவிலும், மனு-சுமீத் ரெட்டி ஜோடி இரட்டையர் பிரிவிலும் முதல்சுற்றைத் தாண்டவில்லை.
    Next Story
    ×