search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: அரியானா அணிக்கு 5-வது வெற்றி
    X

    புரோ கபடி லீக்: அரியானா அணிக்கு 5-வது வெற்றி

    புரோ கபடி லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 36-29 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 5-வது வெற்றியை ருசித்தது.
    கொல்கத்தா:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் 19-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த பாட்னா பைரட்ஸ் அணி 47-21 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது. 9-வது ஆட்டத்தில் ஆடிய பாட்னா அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 36-29 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 5-வது வெற்றியை ருசித்தது.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் (இரவு 8 மணி), பெங்கால் வாரியர்ஸ்-மும்பை (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×