search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடிக்க முடியும் - ஹர்திக் பாண்டியா
    X

    ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடிக்க முடியும் - ஹர்திக் பாண்டியா

    தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த கலந்துரையாடலில் பேசிய ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடிக்க முடியும் என கூறியுள்ளார்.

    தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்காக புஜாராவும், ஹர்திக் பாண்டியாவும் காலே டெஸ்ட் போட்டி பற்றி கலந்துரையாடல் நிகழ்த்தினர்.

    இதில் தன் அறிமுக டெஸ்ட் போட்டியின் அனுபவம் பற்றி ஹர்திக் பாண்டியா சில சுவாரசிய தகவல்களை தெரிவித்தார்.

    “நான் களத்தில் பேட் செய்த போது ஒருநாள் கிரிக்கெட் போன்றுதான் உணர்ந்தேன். சூழ்நிலையும் துல்லியமாக அப்படியே இருந்தது. சர்வதேச கிரிக்கெட் வீரராக நிலைத்திருக்க, போட்டிக்களத்தில் கடுமையாக போராட வேண்டும். போட்டியின் வடிவங்கள் மாறும்போது மனநிலையும் மாறுகிறது, ஆனால் அடிப்படை திறமை என்பது மாறாததே” என்றவரிடம் புஜாரா ஒரு கேள்வியை முன்வைத்தார்.

    யுவராஜ் சிங் போன்று ஒரே ஓவரில் 6 சிக்சர்களை கொளுத்த முடியுமா..? என்ற கேள்விக்கு ஹர்திக் அருமையாக பதிலளித்தார்.

    “இது வரை ஒரு ஓவரில் 6 சிக்சர்களை அடிப்பது பற்றி யோசிக்கவில்லை. 3 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்துள்ளேன். 4-வது சிக்சருக்குச் செல்லவில்லை. காரணம் சூழ்நிலை அத்தகைய தேவையை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஒருநாள் அப்படித்தான் ஆட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் 6 பந்துகளையும் சிக்சர்களாக அடிக்க நிச்சயம் முயற்சி செய்வேன்” என்றார்.

    மேலும் கூறும்போது, “வரவிருக்கும் தென் ஆப்பிரிக்க தொடர்களில் பார்க்கலாம். தென் ஆப்பிரிக்கா தொடருக்கு வித்தியாசமான முறையில் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எனக்குத் தெரியும். அத்தொடர் எளிதானதல்ல. பந்துகள் ‘ஸ்விங்’ ஆகி எழும்பும். அதற்கு தனிப்பட்ட பயிற்சிகள் தேவை” என்றார்.

    இவ்வாறு கூறிய ஹர்திக்கிடம், ‘ராக் ஸ்டார்’ என்ற பட்டம் பிடித்திருக்கிறதா? என்று புஜாரா கேட்ட போது, “நான் ராக் ஸ்டாரா இல்லையா என்பதை நான் கூற இயலாது. ஆனால் என் தலைமுடி நிறத்தில் சில பரிசோதனைகளைச் செய்து பார்ப்பது எனக்குப் பிடிக்கும். இதற்காக என்னை ‘ராக் ஸ்டார்’ என்று அழைத்தால் எனக்கு பிரச்சினை இல்லை” என்றார் பாண்டியா. 
    Next Story
    ×