search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பிளே கண்டிப்புடன் நடந்து கொண்டாரா?: விக்கெட் கீப்பர் சஹா பேட்டி
    X

    கும்பிளே கண்டிப்புடன் நடந்து கொண்டாரா?: விக்கெட் கீப்பர் சஹா பேட்டி

    முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்பிளே கண்டிப்புடன் நடந்து கொண்டாரா? என்ற கேள்விக்கு இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா பதில் அளித்துள்ளார்.
    கொல்கத்தா:

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்து விட்டு தாயகம் திரும்பியுள்ள இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா கொல்கத்தாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்பிளே கறார் பேர்வழி என்று நான் உணர்ந்தது கிடையாது. ஒரு பயிற்சியாளராக சில நேரங்களில் அல்லது சில வழிகளில் அவர் கடுமையாக நடந்து கொள்ள வேண்டி இருந்தது. இதை சில வீரர்கள், அவர் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார் என்று நினைத்தனர். ஆனால் எனக்கு ஒரு போதும் அத்தகைய எண்ணம் தோன்றியதில்லை.

    கும்பிளே எப்போதும் இந்திய அணி 400, 500, 600 ரன்கள் இப்படி மிகப்பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டும் என்று விரும்புவார். இதே போல் எதிரணி பேட் செய்யும் போது 150 முதல் 200 ரன்களுக்குள் சுருட்டி விட வேண்டும் என்று நினைப்பார். ஆனால் இவை எப்போதும் நடக்கக்கூடியது அல்ல.


    தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை எடுத்துக் கொண்டால், ‘களம் இறங்கி எதிரணியை அடக்கி தூக்கி வீசுங்கள்’ என்று அடிக்கடி சொல்வார். இவை தான் இவர்கள் இரண்டு பேரிடம் நான் பார்த்த வித்தியாசம். மற்றபடி இருவரும் நேர்மறை சிந்தனையுடன் ஊக்கப்படுத்துவார்கள். ரவிசாஸ்திரி முன்பு அணியின் இயக்குனராக பணியாற்றிய போது, ஆக்ரோஷமான பாணியை கையாண்டார். ஆனால் இப்போது பயிற்சியாளர் பணியில் இன்னும் அதிக ஈடுபாடு காட்டுவது போல் தெரிகிறது.

    இவ்வாறு விருத்திமான் சஹா கூறினார்.
    Next Story
    ×