search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: நடால் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: நடால் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் வியாழன்கிழமை (17-ம் தேதி) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ரபேல் நடாலும், 30-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் ரிச்சர்டு கேஸ்கியூடும் மோதினர்.

    இப்போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளிலும் நடால் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் நடால் இத்தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். 

    மற்றொரு இரண்டாம் சுற்று போட்டியில் நான்காம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டியாபோவிடம் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறினார்.

    இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் மூன்றாம் சுற்று போட்டியில் ஏழாம்நிலை வீரர் டிமித்ரோ 6-3, 7-5 என்ற நேர் செட்களில் அர்ஜெண்டினாவின் மார்டின் டெல் பொட்ரோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையை பிரிவில் நடைபெற்ற இரண்டாம் சுற்று போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பில்ஸ்கோவா, ரஷியாவின் சௌரெஸ் நவரோவை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையை பிரிவில் நடைபெற்ற மற்றொரு மூன்றாம் சுற்று போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலிப், லடிவியாவின் செவஸ்டோவாவை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆறாம் நிலை வீராங்கனையான வோஸ்நியாகி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் பார்ட்டியை வீழ்த்தினார்.

    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நான்காம் நிலை வீராங்கனையான முகுருஷா, அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்கொண்டார். இப்போட்டியில் முகுருஷா 6-4, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    Next Story
    ×