search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அணியின் வெற்றி தொடருகிறது: மதுரையை 59 ரன்னில் சுருட்டி வீசியது
    X

    தூத்துக்குடி அணியின் வெற்றி தொடருகிறது: மதுரையை 59 ரன்னில் சுருட்டி வீசியது

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி அணியும் மதுரை அணியும் மோதின. இதில் 137 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணி மெகா வெற்றியை பெற்றது.
    நத்தம்:

    2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நேற்று மாலை நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சும், மதுரை சூப்பர் ஜெயன்ட்டும் மோதின. தூத்துக்குடி அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணி 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எஸ்.பி.நாதன் 77 ரன்களும் (33 பந்து, 2 பவுண்டரி, 9 சிக்சர்), பொறுப்பு கேப்டன் ஆனந்த் 33 ரன்களும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் (11 ரன்), கவுசிக் காந்தி (10 ரன்) இந்த முறை ஜொலிக்கவில்லை.

    அடுத்து களம் இறங்கிய மதுரை அணி 2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 36 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது. அதன் பிறகு அவசரகதியில் பேட்டை சுழட்டிய மதுரை வீரர்கள் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் மதுரை அணி 8.5 ஓவர்களில் 59 ரன்னில் அடங்கிப்போனது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது தான். இதன் மூலம் தூத்துக்குடி அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது.

    தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் தூத்துக்குடி அணி தொடர்ந்து 7 வெற்றிகளை குவித்து சாதனை படைத்துள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டில் லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் மண்ணை கவ்விய மதுரை அணி இந்த சீசனிலும் ஒரு வெற்றி கூட பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. 
    Next Story
    ×