search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் அவதி: காலே டெஸ்ட்டில் இடம்பெறவில்லை
    X

    லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் அவதி: காலே டெஸ்ட்டில் இடம்பெறவில்லை

    இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் காலே டெஸ்டில் பங்கேற்கமாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நாளை மறுநாள் (26.07.2017) தொடங்குகிறது. இதற்கு முன் இந்தியா இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மோதியது. முதல் டெஸ்டில் விளையாடுவதற்காக நேற்று இந்திய அணி காலே சென்றடைந்தது.

    காலே டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் தயாராகி வரும் நிலையில் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.

    லோகேஷ் ராகுல் உடல்நலம் குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை பிசிசிஐ மெடிக்கல் குழு உறுதி செய்துள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து கவலையளிக்கக்கூடிய வகையில் பெரிய விஷயம் இல்லை. அவர் விரைவாக குணமடைந்து வருகிறார்.



    அவர் உடல்நிலை முன்னேற்றம் குறித்து மெடிக்கல் குழு திருப்பதியடைந்துள்ளது. முன்னெச்செரிக்கை காரணமாக, ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் காலேயில் நடைபெறும் முதல் டெஸ்டில் பங்கேற்கமாட்டார். ராகுல் உடல்நிலை குறித்து மெடிக்கல் குழு தொடர்ந்து காண்காணித்து வரும்’’ என கூறப்பட்டுள்ளது.

    இதனால் காலேயில் நடைபெறும் முதல் டெஸ்ட்டில் லோகேஷ் ராகுல் பங்கேற்றமாட்டார் என்பது தெளிவாகியுள்ளது. ஏற்கனவே, இந்திய அணியில் சேர்க்கப்பட்ட முரளி விஜய், காயம் குணமடையாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டு, தவான் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் லோகேஷ் ராகுல் காய்ச்சலால் முதல் டெஸ்டில் பங்கேற்காகது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
    Next Story
    ×