search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: இந்திய வீரர் அஸ்வினுக்கு பின்னடைவு, ஜடேஜா தொடர்ந்து முதலிடம்
    X

    ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: இந்திய வீரர் அஸ்வினுக்கு பின்னடைவு, ஜடேஜா தொடர்ந்து முதலிடம்

    ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் சரிந்து மூன்றாவது இடம் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கிறார்.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்திலிருந்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு இடம் சரிந்து மூன்றாவது இடத்தில் உள்ளார். 

    சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இலங்கை அணியின் ரங்கனா ஹெராத் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தை இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா தக்கவைத்துள்ளார்.

    டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்களான புஜாரா மற்றும் விராத் கோலி முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ளனர்.
    Next Story
    ×