search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபி: டக்வொர்த் லூயிஸ் முறையில் தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்
    X

    சாம்பியன்ஸ் டிராபி: டக்வொர்த் லூயிஸ் முறையில் தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட்டதால் 19 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
    லண்டன்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட்டதால் 19 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 7-வது ஆட்டம் நேற்று பர்மிங்காமில் நடைபெற்றது. இதில், குரூப் பி பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி பின்னர் நிதானமாக முன்னேறியது.

    துவக்க வீரர்களாக குயின்டன் டி காக், அம்லா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி 40 ரன்கள் எடுத்த நிலையில், அம்லா (16) ஆட்டமிழந்தார். டி காக் 33 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். கேப்டன் டிவில்லியர்ஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். டுபிளசிஸ் 26 ரன்களும், டுமினி 6 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்க மறுமுனையில் நம்பிக்கை அளித்த டேவிட் மில்லர் அரை சதம் கடந்தார்.



    கடைசி நேரத்தில் மோரிஸ் (28), ரபாடா (26) ஆகியோரின் விக்கெட்டுகளை ஜூனைத் கான் கைப்பற்ற, தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் சேர்த்தது. மில்லர் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகள் எடுத்தார். ஜுனைத் கான், இமாத் வாசிம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், முகமது ஹபீஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அசார் அலி மற்றும் சாமன் ஆகியோர் பேட்டிங் செய்தனர். தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அதிரடி பந்துவீச்சால் பாகிஸ்தான் ரன்களை எடுக்க திணறியது.

    அசார் அலி 9 ரன்களிலும், அறிமுக வீரர் சாமன் 31 ரன்களிலும் வெளியேறினர். இதனையடுத்து, களமிறங்கிய பாபர் ஆலம் மற்றும் ஹபீஸ் நிதானமாக விளையாடி ரன்களை சேகரித்தனர். இதனால், அந்த அணியின் ரன் மெதுவாகவே உயர்ந்தது. 26 ரன்களில் ஹபீஸ் மோர்கெல் பந்தில் கேட்ச் ஆனார்.

    ஆட்டத்தின் 27-வது ஓவரில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லூயிஸ் முறையில் பாகிஸ்தான் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
    Next Story
    ×