search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபி: ரோகித் சர்மா, கேதர் ஜாதவ் இங்கிலாந்து செல்வது தாமதம்
    X

    சாம்பியன்ஸ் டிராபி: ரோகித் சர்மா, கேதர் ஜாதவ் இங்கிலாந்து செல்வது தாமதம்

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி நேற்று இங்கிலாந்து புறப்பட்டது. ஆனால், ரோகித் சர்மா மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் புறப்படவில்லை.
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 8 அணியில் நடப்பு சாம்பியனான இந்தியாவும் ஒன்று. இந்தியா தனது முதல் போட்டியில் ஜூன் 4-ந்தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்த தொடருக்கு முன்பாக வருகிற 28-ந்தேதி நியூசிலாந்துடனும், 30-ந்தேதி வங்காள தேசத்துடனும் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி நேற்று இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது.

    இன்று இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்தது. தங்களது பயிற்சியை தொடங்க ஆயத்தமாகி வருகிறது. 15 பேர் கொண்ட இந்திய அணியல் நேற்று 13 பேர் மட்டுமே சென்றுள்ளனர்.

    ரோகித் சர்மா மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் இந்திய அணியுடன் செல்லவில்லை. உறவினரின் திருமணம் இருப்பதால், பிசிசிஐ-யிடம் தாமதாக கிளம்ப ரோகித் சர்மா அனுமதி கேட்டுள்ளார். அதற்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

    கேதர் ஜாதவிற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் விசா கிடைக்காததால் அவர் நேற்று அணியுடன் கிளம்பவில்லை. புதன்கிழமை மதியம் வரை காத்திருந்தோம். ஆனால் விசா கிடைக்கவில்லை.

    தற்போது விசா கிடைத்துவிட்டது. நாளை புறப்பட்டு அணியுடன் அவர் சேருவார். இருவரும் 28-ந்தேதி நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
    Next Story
    ×