search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூப்பர் ஓவரில் குஜராத்தை வீழ்த்தி வென்றது புதிய அனுபவம் - ரோகித்சர்மா
    X

    சூப்பர் ஓவரில் குஜராத்தை வீழ்த்தி வென்றது புதிய அனுபவம் - ரோகித்சர்மா

    குஜராத்தை வீழ்த்தி மும்பை திரில் வெற்றி சூப்பர் ஓவரில் வென்றது புதிய அனுபவம் -ரோகித்சர்மா
    ராஜ்கோட்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் குஜராத்தை சூப்பர் ஓவரில் மும்பை வீழ்த்தியது.

    முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்தது.

    அடுத்து விளையாடிய மும்பை அணியில் சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. அதில் குணால் பாண்ட்யா ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டம் ‘டை’ ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. முதலில் ஆடிய மும்பை 2 விக்கெட்டையும் இழந்து 11 ரன் எடுத்தது. 12 ரன் இலக்குடன் குஜராத் களம் இறங்கியது. மும்பை தரப்பில் பும்ரா பந்து வீசினார். பிரண்டன் மேக்குல்லம்-ஆரோன் பிஞ்ச் ஜோடி எதிர்கொண்டது.

    இதில் பும்ரா சிறப்பாக பந்துவீசி 6 ரன் மட்டும் விட்டு கொடுத்தார். இதனால் மும்பை வெற்றி பெற்றது. இது அந்த அணியின் 7-வது வெற்றியாகும்.

    வெற்றி குறித்து மும்பை கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    இந்த வெற்றி எனது பிறந்தநாள் பரிசாக அமைந்தது. முதல் முறையாக சூப்பர் ஓவரில் விளையாடினோம். அது எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. நாங்கள் நல்ல தொடக்கம் பெற்றோம். குணால் பாண்ட்யா கடைசி வரை நின்று சிறப்பாக விளையாடினார்.

    ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. 20 ஓவர் போட்டியில் உத்வேகம் தான் முக்கிய பங்கு வகிக்கும்.

    குஜராத் கேப்டன் ரெய்னா கூறுகையில், இது மிகவும் அற்புதமான ஆட்டமாக இருந்தது. ஆடுகளத்தில் பந்து மெதுவாக வந்தது. தொடக்கத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். ஆனால் சிறப்பாக பந்து வீசினோம். உண்மையில் நாங்கள் நல்ல ஸ்கோரை எடுக்கவில்லை என்றார்.
    Next Story
    ×