search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கற்பழித்தவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய பெண்
    X

    கற்பழித்தவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய பெண்

    உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் தன்னை கற்பழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி பகுதியைச் சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி, திவ்ய பாண்டே மற்றும் அன்கித் வர்மா ஆகியோர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி தன்னை கற்பழித்ததாக பாரபங்கி பகுதி போலீசில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்த போலீசார் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

    இதற்கிடையில், புகார் அளித்த பெண்ணின் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கை தொடங்கி அவரது ஆபாச படங்களையும் பதிவேற்றம் செய்தனர். மேலும் தனது மகளை குற்றம்சாட்டப்பட்டவர்கள் மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ரேபரேலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவ்விரு புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் மனமுடைந்த பெண் பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

    'தங்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும் என குற்றவாளிகள் மிரட்டி வருகின்றனர். அதிகாரமும் செல்வாக்கும் படைத்தவர்களின் ஆதரவு அவர்களுக்கு உள்ளதால் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன்' என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×