search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியரசு தின விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த ரகசிய திட்டம்: மத்திய அரசு எச்சரிக்கை
    X

    குடியரசு தின விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த ரகசிய திட்டம்: மத்திய அரசு எச்சரிக்கை

    குடியரசு தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக வெளியான தகவலால் மத்திய உள்துறை அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையுடம் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. #RepublicDay
    புதுடெல்லி:

    இந்திய குடியரசு தின விழா, சுதந்திர தின விழாக்களில் தாக்குதல் நடத்துவதற்கு ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் முயற்சித்து வருகிறார்கள். அதை இந்திய படைகள் முறியடித்து வருகிறது.

    அதேபோல் வரும் குடியரசு தின விழாவிலும் தாக்குதல் நடத்துவதற்கு தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.

    சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தி இருக்கிறது. அதில், ராணுவ உயர் அதிகாரிகள், லஸ்கர்-இ-தொய்பா, ஜெய் சீ முகமது தீவிரவாத அமைப்புகளின் தளபதிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவது சம்பந்தமாக அவர்கள் ஆலோசித்ததாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தீவிரவாத இயக்க தளபதிகள் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் பெருமளவு உயிரிழப்புகளை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சிலிப்பர் செல்களாக செயல்படுபவர்கள் மனசோர்வடைந்துள்ளனர்.

    எனவே, பெரும் தாக்குதல்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டனர். இதையடுத்து இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவது என்று அந்த கூட்டத்தில் முடிவெடுத்தனர்.

    அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி குடியரசு தின விழாவில் தாக்குதல் நடக்கலாம் என்று இந்திய உளவுத்துறை கருதுகிறது. இது சம்பந்தமாக உளவுத்துறை அமைப்புகள் மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளது.

    இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை தகவல் அனுப்பி இருக்கிறது. அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் கமி‌ஷனர்கள் ஆகியோருக்கு இந்த தகவல் அனுப்பப்பட்டு இருக்கிறது.



    குறிப்பாக டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் உஷாராக இருக்கும்படி அதில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    விமானங்கள், சிறிய ரக விமானங்கள், ஆளில்லா விமானங்கள் போன்றவைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவற்றின் மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது.

    விமான நிலையங்கள், விமானங்களை இயக்குவதற்கு வசதி உள்ள திறந்த வெளி மைதானங்கள் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    சிறிய ரக விமானங்கள், கிளைடர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவை குடியரசு தின விழா நடக்கும் நேரத்தில் பறப்பதை கட்டுப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. #RepublicDay
    Next Story
    ×