search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளம்: ஹெல்மெட் அணியாமல் வந்தவரை அடித்து கொன்ற போலீசார்
    X

    மேற்கு வங்காளம்: ஹெல்மெட் அணியாமல் வந்தவரை அடித்து கொன்ற போலீசார்

    மேற்கு வங்க மாநிலத்தில் வாகன சோதனையின்போது ஹெல்மெட் அணியாமல் சென்ற நபரை போலீசார் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமலில் உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் அவர்களுக்கு பெரும் அபராதம் விதிக்கப்படுகிறது.

    மேற்கு வங்க போலீசாருக்கு உதவும் வகையில் சமூக சேவகர்களையும் போலீஸ் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களுக்கும் போலீசுக்கான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு போலீசில் பணியாற்றும் 2 பேர் வடக்கு பாரகன் மாவட்டம், மத்திய மக்ராம் நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சவுமன் தேப்நாத் என்பவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை மடக்கி அபராதம் விதித்தனர். ஆனால், அவர் அபராதம் செலுத்த மறுத்தார். இதனால் அவர்கள் இருவரும் அவரை அடித்து உதைத்தனர்.

    இதில் சவுமன்தேப்நாத் மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    சவுமன்தேப்நாத் மயங்கி விழுந்ததுமே பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அதை பார்த்ததும் போலீஸ்காரர்கள் இருவரும் அருகில் உள்ள பொது கழிவறைக்குள் சென்று பதுங்கினார்கள். பின்னர் ஜன்னலை உடைத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து உள்ளூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினார்கள். தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.

    இது சம்பந்தமாக உள்ளூர் மக்கள் கூறும்போது, போலீசில் இருக்கும் சமுக பணியாளர்கள் அபராதம் விதிப்பது போக்குவரத்து விதிக்கு மாறானது. அவர்கள் அதிக அபராதம் வசூலிப்பதுடன் அதற்கான ரசீதும் தருவதில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.
    Next Story
    ×