search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.என்.எஸ். கல்வாரி நீர்மூழ்கி கப்பல்: பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்
    X

    ஐ.என்.எஸ். கல்வாரி நீர்மூழ்கி கப்பல்: பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்

    இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். கல்வாரி என்ற நீர்மூழ்கி போர்க் கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெறுகிறது.
    புதுடெல்லி:

    இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். கல்வாரி என்ற நீர்மூழ்கி போர்க் கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெறுகிறது.

    இந்தியாவின் முதல் ஸ்கார்பியன் கிளாஸ் நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்., கல்வாரி மசாகான் டக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.  இந்த நீர்மூழ்கி போர்க்கப்பல் 66 மீ., நீளமும், 6.2 மீ., விட்டமும், 1,550 டன் எடையும் கொண்டது.  



    நீர் மட்டத்தில் செல்லும்போது மணிக்கு 22 கி.மீ., வேகத்திலும், நீரில் மூழ்கி செல்லும்போது மணிக்கு 37 கி.மீ., வேகத்திலும் செல்லும் திறன் படைத்தது. டீசல் இன்ஜின் மட்டுமின்றி, மின் மோட்டார்கள் மூலமாகவும் இயங்கும் கல்வாரி, பல நாட்கள் வரை தண்ணீரிலேயே இருக்கும் வசதி கொண்டது. இது அதிகபட்சமாக கடலுக்கடியில் 350 மீ., வரை ஆழத்தில் செல்லும் சக்தி கொண்டது.

    இந்நிலையில்  ஐ.என்.எஸ். கல்வாரி நீர்மூழ்கி போர்க் கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இதற்காக பிரதமர் மோடி நேற்று நள்ளிரவு மராட்டிய மாநிலத்துக்கு வருகை தந்தார்.

    மும்பை வந்த பிரதமர் மோடியை, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ஆளுனர் வித்யாசாகர் ராவ் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் வரவேற்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×