search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சரவையில் இருந்து 4 மந்திரிகள் நீக்கம்: நாகாலாந்து முதல் மந்திரி அதிரடி
    X

    அமைச்சரவையில் இருந்து 4 மந்திரிகள் நீக்கம்: நாகாலாந்து முதல் மந்திரி அதிரடி

    நாகாலாந்து முதல் மந்திரி ஜெலியாங், தனது அமைச்சரவையில் உள்ள நான்கு மந்திரிகளை நீக்கி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    கவுகாத்தி:

    நாகாலாந்து முதல் மந்திரி ஜெலியாங், தனது அமைச்சரவையில் உள்ள நான்கு மந்திரிகளை நீக்கி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நாகாலாந்து முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜெலியாங். இவர் கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி பொறுப்பேற்றார். இவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் நாகாலாந்து மக்கள் முன்னணியை சேர்ந்த 36 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதனால் 47 வாக்குகள் பெற்று ஜெலியாங் வெற்றி பெற்று ஆட்சியை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், நாகாலாந்து முதல் மந்திரி ஜெலியாங் தனது அமைச்சரவையில் இருந்து 4 மந்திரிகளை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து மாநில முதன்மை செயலாளர் பங்கஜ் குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் மந்திரி ஜெலியாங் தனது அமைச்சரவையின் உள்துறை மந்திரி படான், பள்ளிக்கல்வி மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி டோகிஹோ எப்தோமி, பொதுப்பணி துறை மந்திரி நீல்கிசாலே நிகி கிரே மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி நிபா க்ரோனு உள்பட 4 பேரை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

    நாகாலாந்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் அமைச்சர்களை முதல் மந்திரி நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×