search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலி
    X
    சாலி

    இந்தியாவில் நாய் பிடிக்கும் வேலை செய்யும் முதல் பெண்மணி

    வெறிநாய் கடியில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற இந்த வேலையை மன நிறைவுடன் செய்கிறேன் என்று பட்டதாரி பெண் சாலி கூறினார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சாலி (வயது 29). பட்டப்படிப்பு படித்த இவர் ஊடகத்துறைகளில் வேலை தேடினார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. அரசு துறையில் வேலை கிடைக்கும் என்று விண்ணப்பித்தார். ஆனால் அங்கும் வேலை கிடைக்கவில்லை.

    இதனால் மனம் வெறுத்துபோன சாலி தெருநாய் மற்றும் வெறிநாய் பிடிக்கும் வேலையில் சேர முயன்றார். ஆனால் அதற்கும் முறையான பயிற்சி மற்றும் சான்றிதழ் வேண்டும் என்று கூறினர். இதனையடுத்து நாய் பிடிக்கும் பயிற்சி பெற சாலி முடிவெடுத்தார்.

    அதன்படி நாய் பிடிக்க ஊட்டியில் டபிள்யூ.வி.எஸ். என்ற அமைப்பு பயிற்சி அளித்து வருகிறது. அதில் சேர்ந்து சாலி பயிற்சி பெற்றார். நாய்களை லாவகமாக பிடிப்பதில் வல்லவர் என்று சான்றிதழை பெற்றார். பின்னர் கொஞ்ச காலம் வீட்டில் இருந்தார். இந்நிலையில் மலப்புர மாவட்ட பஞ்சாயத்து சார்பில் வெறிநாய்களை பிடிக்க ஒருவர் தேவை என்று அறிவிப்பு வெளியானது. அந்த வேலைக்கு சாலி விண்ணப்பம் செய்தார். நேர்முகத்தேர்வில் அவர் தேந்தெடுக்கப்பட்டார்.

    நாய் பிடிக்கும் குழுவில் 2 டாக்டர்கள் உள்பட 8 ஊழியர்கள் உள்ளனர். அதில் நாயை பிடிக்கும் வேலையை சாலி செய்து வருகிறார். ஒரு நாயை பிடித்து ஊசிபோட்டு கொன்றால் ரூ.1300 வழங்கப்படுகிறது. ஒரு நாயை பிடித்து கொன்றால் இவ்வளவு பணமா? என்று சாலி ஆச்சர்யம் அடைந்தார். ஐ.டி. தொழிலை விட நாய் பிடிக்கும் தொழிலில் அதிக வருமானம் கிடைப்பதாக சாலி கூறினார்.

    வெறிநாய் கடியில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற இந்த வேலையை மன நிறைவுடன் செய்கிறேன் என்று பட்டதாரி பெண் சாலி கூறினார். இந்தியாவிலேயே நாய் பிடிக்கும் வேலை செய்யும் முதல் பெண்மணி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×