search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன கட்டுப்பாட்டு திட்டம் கைவிடப்படுகிறது: டெல்லி போக்குவரத்து துறை மந்திரி அறிவிப்பு
    X

    வாகன கட்டுப்பாட்டு திட்டம் கைவிடப்படுகிறது: டெல்லி போக்குவரத்து துறை மந்திரி அறிவிப்பு

    அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள வாகன கட்டுப்பாட்டு திட்டம் கைவிடப்பட்டுள்ளது என டெல்லி போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அங்கு வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. டெல்லியை ஒட்டியுள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது.

    கடந்த சில தினங்களாக மாசு கலந்த பனிமூட்டம் நிகழ்வதால் சாலை விபத்துக்கள், ரெயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை காணப்படுகிறது. டெல்லியில் மட்டும் அடுத்த வாரம் வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பணிகள் நடத்த, அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து இயங்கும் கனரக வாகனங்கள் நகரத்தில் இயங்கவும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கடந்தாண்டை போல் காற்று மாசுபாட்டை குறைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக டெல்லி அரசு முடிவு செய்திருந்தது.
    வரும் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சாலைகளில் ஒற்றைப்படை பதிவு எண் கொண்ட வாகனங்களை ஒரு நாளில் அனுமதிப்பதும், மறுநாள் இரட்டைப்படை பதிவு எண் கொண்ட வாகனத்தை இயக்க அனுமதிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    இந்நிலையில், டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள வாகன கட்டுப்பாடு திட்டம் கைவிடப்படுகிறது. தற்போதைக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படாது என போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் கெலாட் இன்று தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக கைலாஷ் கெலாட் கூறுகையில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பெண்கள் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள விதிகளை கருத்தில் கொண்டு வாகன கட்டுப்பாட்டு திட்டம் தற்போது செயல்படுத்தப்படாது. எனவே வாகன கட்டுப்பாடு திட்டம் செயல்படுத்துவது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மீண்டும் மனு செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×