search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா பிரசாரத்துக்கு பணம் கொடுத்து ஆட்களை திரட்டுகிறார்கள்: பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் குற்றசாட்டு
    X

    எடியூரப்பா பிரசாரத்துக்கு பணம் கொடுத்து ஆட்களை திரட்டுகிறார்கள்: பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் குற்றசாட்டு

    எடியூரப்பா பிரசார பயணத்துக்கு ரூ.500, ரூ.1000 கொடுத்து ஆட்களை திரட்டி வருவதாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சொகடு சிவண்ணா குற்றம்சாட்டி உள்ளார்.
    பெங்களூரு:

    முன்னாள் அமைச்சரும் பாரதிய ஜனதா பிரமுகருமான சொகடு சிவண்ணா நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகா மாநிலத்தில் அவசரமான காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை வளர்த்திருக்கிறோம். வட்டம், மாவட்டம், மாநில அளவில் கட்சியை வளர்த்து 2008-ம் ஆண்டில் தென்இந்தியாவில் முதன்முறையாக பாரதிய ஜனதா ஆட்சியை கர்நாடக மாநிலத்தில் உருவாக்கினோம்.

    போலீசாரின் தடியடிகளை தாங்கி கொண்டு கட்சியை கட்டமைத்தோம். சமீப காலமாக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்கட்சிகளில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    பாரதிய ஜனதாவை வளர்க்க பாடுபட்டவர்களுக்கு முக்கித்துவம் அளிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பசவராஜ் முந்தைய பாரதிய ஜனதா ஆட்சியின் போது எடியூரப்பாவால் பாரதிய ஜனதாவுக்கு அழைத்து வரப்பட்டவர். அவரது மகன் ஜோதி கணேசுக்கு மாவட்ட தலைவர் பதவியை எடியூரப்பா வழங்கி உள்ளார்.

    இதே போல பாரதிய ஜனதாவில் இருந்து விலகி எடியூரப்பாவுடன் கர்நாடகா ஜனதா கட்சியை தொடங்கியவர்களுக்கு மீண்டும் பாரதிய ஜனதாவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்து கட்சிக்கு உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.

    எடியூரப்பாவின் மாற்றத்துக்கான பயணத்தில் உண்மையான பாரதிய கட்சி தொண்டர்கள் புறக்கனிக்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றத்துக்கான பயணத்தில் கலந்து கொள்ள மக்களை ரூ.500, ரூ.1000 கொடுத்து அழைத்து வரப்பட்டுள்ளனர். இப்படி எல்லாம் கட்சியை வளர்க்க முடியாது. எதிர் கட்சிகளில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு வந்தவர்களால் தான் பாரதிய ஜனதாவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×