search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8-ந்தேதி பணமதிப்பு நீக்க தினம்: 50 ஆயிரம் பேர் கூடி தேசியகீதம் பாடுகிறார்கள் - ராஜஸ்தான் அரசு ஏற்பாடு
    X

    8-ந்தேதி பணமதிப்பு நீக்க தினம்: 50 ஆயிரம் பேர் கூடி தேசியகீதம் பாடுகிறார்கள் - ராஜஸ்தான் அரசு ஏற்பாடு

    ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா மாநில அரசு சார்பில் வருகிற 8-ந்தேதி 50 ஆயிரம் பேர் ஒன்று கூடி தேசியகீதம் பாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட முதலாம் ஆண்டு தினம் கறுப்பு பண ஒழிப்பு வெற்றி தினமாக வருகிற 8-ந்தேதி பா.ஜனதா சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா மாநில அரசு சார்பில் வருகிற 8-ந்தேதி 50 ஆயிரம் பேர் ஒன்று கூடி தேசியகீதம் பாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் 50 ஆயிரம் பேர் ஸ்டேடியத்தில் கூடுகிறார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து தேசியகீதம் பாடுகிறார்கள். முன்னதாக வந்தே மாதரம் பாடலும் பாடுகிறார்கள்.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து 8-ந்தேதி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கறுப்பு தினம் கடைப்பிடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு போட்டியாக ராஜஸ்தான் மாநில அரசு தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் தேசிய கீதம், வந்தேமாதரம் பாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
    Next Story
    ×